Job Details

TNPSC

Last Dates : 29.01.2021
Bachelor Degree,
TNPSC Departmental Exam அறிவிப்பு 2021

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிரந்தர பதிவு துறைத்தேர்வுகள் டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது TNPSC ஆனது 2020 ஆம் ஆண்டிற்கான துறைத்தேர்வுகளை 14.02.2021 முதல் 21.02.2021 வரை நடத்த திட்டமிட்டுள்ளது. எனேவ இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 08.01.2021 முதல் 29.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

Image result for join our whatsapp group

 

Name of the Board Tamilnadu Public Service Commission
Name of the Examination Departmental Examinations – December 2020
Date of Notification 08.01.2021
Date & Time of closing 29.01.2021 till 11.59 PM
Apply Mode Online
TNPSC Departmental Exam விவரங்கள்:

அரசுப்பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் (பொது கல்வி தகுதி தேர்வு தவிர) துறைத் தேர்வுகள் பொதுவானவையாகும்.

துறைத் தேர்வு வயது வரம்பு:

துறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இவ்வறிவிக்கை நாளன்று 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

TNPSC Departmental Exam விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் ரு.200/- தேர்வு கட்டணமாகவும், பதிவுக்கட்டணமாக ரு.300 ம் சேர்த்து இணையவழி செலுத்தும் முறையில் அதாவது இணையவங்கி / பற்று அட்டை / கடன் அட்டை முறை ஆகியவற்றில் ஏதெனும் ஒரு முறையில் மட்டுமெ தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

TNPSC தேர்வு மையம்

விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தின் தலைநகரில் தான் தேர்வு எழுத வேண்டும், வேறு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டுமெனில் அதற்குத் தேர்வாணையத்தின் தனிப்பட்ட அனுமதி பெறவேண்டும், இந்த நிபந்தனை பணியில் இல்லாதவர்களுக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் பொருந்தாது.

தேர்வு மையத்தை மாற்றுதல்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த பின்னர் தேர்வு மையம் மாற்றம் குறித்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

TNPSC Departmental Test தேர்வு கால அட்டவணை:

முற்பகல் தேர்வு காலை 9.30 மணிக்கும் பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் தொடகும், விண்ணப்பதாரர்கள் முற்பகல் தேர்வுக்கு காலை 9.00 மணிக்கும் பிற்பகல் தேர்வுக்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வுகூடத்திற்குள் வருகை புரிய வேண்டும். தேர்வுகள் தொடங்கிய பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள் அதாவது முற்பகல் 9.30
மணிக்கு பிறகும் மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் எவரும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 29.01.2021 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download TNPSC Departmental Exam Notification 2021

Download TNPSC Departmental Exam INSTRUCTION

Download TNPSC Departmental Exam Syllabus

Apply Online

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe