Job Details

தமிழக முதல்வராக இன்று திரு மு .க ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டார். முதல்வராக பொறுப்பேற்று கொண்டவுடன் முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

5 கோப்புகளில் முதல்வர் மு .க ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்

முதல் கையெழுத்து: ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ.4000 வழங்கப்படும். “கொரோனா நிவாரணதின் முதல் தவணையாக ரூ 2000 மே  மாதமே வழங்கப்படும்.”

இரண்டாவது கையெழுத்து: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பதாக அவர் கையெழுத்திட்டுள்ளார். “ஆவின் பால் விலை குறைப்பு மே  16 ஆம் தேதி அமலுக்கு வரும் என அறிவிப்பு!”

மூன்றாவது  கையெழுத்து: மக்களின் குறைகளை 100 நாட்களில் தீர்ப்பதற்கான தனி துறை உருவாக்கும் ஆணையில் கையெழுத்து.

நான்காவது கையெழுத்து: அணைத்து மகளிருக்கும் நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் ஆணையில் கையெழுத்து. “மகளிர் கட்டண மின்றி பயணிக்க போக்குவரத்து துறைக்கு ரூ. 1200 கோடி மானியம்”

ஐந்தாவது கையெழுத்து: கொரோனா நோயாளிகளுக்கான தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசே ஏற்கும்.

Latest Govt Jobs