Job Details

தேர்வுத்துறை உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்க வேண்டிய அகமதிப்பீடு மதிப்பெண்களை ஏப்ரல் 15ம் தேதி முதல் வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிகள்:

தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது.

செய்முறை தேர்வுகள்:

முன்னதாக பொதுத்தேர்வுகளுக்கு முன்னர் பள்ளிகள் அளவிலேயே செய்முறை தேர்வுகளை நடத்த தமிழக அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. தற்போது மாவட்ட வாரியாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் ஏப்ரல் 16ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதிப்பீடு:

12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை விளக்க நோட்டுகள் மற்றும் ஆய்வக செயல்பாடுகளை வைத்து அவர்களுக்கான மதிபெண்க்ளை வழங்கி அவற்றை அகமதிப்பீடு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதிப்பெண் பட்டியலை ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 28 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

Latest Govt Jobs