Job Details

2.75 லட்சம் மாணவர்களுக்கு பரிசோதனை

தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொரோனா பாதித்த 5 பள்ளிகளுக்கு 2 வாரம் (14 நாட்கள்) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள 2.75 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டு உள்ளது.

பள்ளிகள் விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 11 மாதங்களுக்கு பின்னர் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது மாநிலத்தில் கொரோனா வைரஸின் 2வது அலை தீவிரமாக பரவுகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதிலும் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் என அடுத்தடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு இதுவரை 7 பள்ளிகளில் 100 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அம்மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் 2.75 லட்சம் மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கூறுகையில், இன்று புதிதாக 2 தனியார் பள்ளிகளில் பயிலும் 27 மாணவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 7 பள்ளிகளை சேர்ந்த 68 மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு நிலவரம்:

  • மார்ச் 8 – அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளி 58 மாணவிகள், 9 பெற்றோர்
  • மார்ச் 13 – பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர்
  • மார்ச் 18 – மேக்ஸ்வெல் மெட்ரிகுலேசன் பள்ளி 21 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர், கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி 7 மாணவிகள், 2 ஆசிரியர் சரஸ்வதி பாடசாலை 6 மாணவிகள், 1 ஆசிரியர் மற்றும் லிட்டில் ரோஸ் பள்ளி 3 மாணவர்கள்.

இவ்வாறு அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கோரி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொரோனா பாதிப்பு உறுதியான 5 பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 2.75 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

Latest Govt Jobs