Job Details

தமிழக அரசின் கீழ் செயல்படும் அரசு துறை நிறுவனங்களில் சிலவற்றிற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ள தமிழக அரசு பெரும்பாலான நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்தினை குறைத்து தற்போது ஒரு புதிய அரசாணையினை வெளியிட்டு உள்ளது.

நிறுவனங்கள் மூடல் !

Image result for join our whatsapp group

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அரசு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன. தொற்றின் தாக்கம் தனியாததினால் அவற்றை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதால், அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உட்பட அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவை வழக்கம் போல செயல்பட இன்னும் சில காலம் ஏற்படும் என்ற நிலையே உள்ளது.

*

சம்பள குறைப்பு !

இதனால் அரசினால் அனைவர்க்கும் வழக்கம் போல சம்பளம் வழங்குவதில் அதிக சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பணியாளர்களுக்கான சம்பளத்தினை குறைக்க அறிவுறுத்தியது.

இதனால் தற்போது பொதுபணித்துறை உதவி பொறியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் போன்ற பல பணிகளுக்கு சம்பளத்தினை ரூ.4500/- முதல் ரூ.5000/- வரை குறைத்துள்ளது. அதே வேளையில் கால்நடை போன்ற சில துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளத்தினை உயர்த்தியும் அரசாணையினை வெளியிட்டு உள்ளது.

Latest Govt Jobs